வேதாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்ரம் !

தமிழ், ஹிந்தி மொழி படங்களில் தனக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னணி நடிகர் மாதவன். தமிழில் இவர் அறிமுகமான அலைபாயுதே திரைப்படம் சம்ம ஹிட்.  சமீப காலமாக இவருக்கு கதைகள் சரிவர அமையவில்லை. மாதவன் நடித்து வெளிவந்த குறிப்பிட்ட சில படங்கள் மெகா ஹிட். அந்த வரிசையில் இறுதி சுற்று, விக்ரம் வேதா, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.    விக்ரம் வேதா திரைப்படத்தை ஹிந்தியில் ஷாருகான் நடிக்க உள்ளதாகவும், ஆனால் அவரின் ஒரு விருப்பமாக ஹிந்தியிலும் விக்ரம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. தோள்பட்டை சிகிச்சை காரணமாக சிறிது நாள் ஓய்வில் இருந்த மாதவன் மீண்டும் ஹிந்தியில் ஷாருகானுடன் ஜீரோ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் ஜூன் 1ம் தேதி மாதவன் தனது 48வது பிறந்தநாளை ஜீரோ படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில், ஷாருகான், அனுஷ்கா சர்மா, மற்றும் இயக்குனர் ஆனந்த் எல் ராயுடன் படக்குழு மாதவனுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>