கடனை அடைக்க உதவிய மலேசிய மக்கள்: பெருமிதத்தில் பிரதமர்!
மலேசியாவின் அரசாங்க கடனை அடைக்க அந்நாட்டு மக்களே உதவி புரிந்துள்ளனர்.
மலேசியாவின் பிரதமராகப் புதிதாகப் பிரதமர் மஹாதீர் முகமது பதவி ஏற்றுள்ளார். நாட்டின் கடன் தொகையான 250 அமெரிக்க டாலர்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதையே தனது முதல் பணி ஆக அறிவித்தார் பிரதமர்.
இதற்காக மக்களிடமே நிதி வசூல் செய்வது என பிரதமர் அறிவித்தார். அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்திலேயே ‘மலேசிய நம்பிக்கை நிதி’ 2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைக் கடனில் இருந்து மீட்க அரசு அறிவித்த திட்டத்தை ஏற்று மலேசிய மக்கள் பற்று உடன் தாங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து நாட்டைக் காப்பதற்காக நன்கொடையாக அளித்து பெரும் உதவி புரிந்துள்ளனர் என மலேசிட நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நாட்டின் பிரதமர் கூறுகையில், “மலேசியர்கள் பலர் அரசுக்கு உதவுவதற்காக மனம் உவந்து நன்கொடை அளித்து வருகின்றனர். நாட்டின் நிலையைப் புரிந்து கொண்டு நாட்டுப் பற்று உடன் அவர்கள் அளிக்கும் உதவியை நாங்கள் வரவேற்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com