கத்துவா விவகாரம்: சிறார் குற்றவாளியால் போலீஸார் குழப்பம்!
கடந்த ஜனவரி மாதம் பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த 8 வயதுப் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. இதில் 8 பேர் குற்றம் சாட்டப்படுகின்றனர். அதில் ஏழு பேர் வயது வந்த ஆண்கள் எனக் கூறப்படுகிறது. ஒருவன் சிறார் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் மருத்துவச் சோதனைகள் செய்யப்பட்டது. இதில் சிறார் என்று சொல்லும் ஆணுக்கு 19 வயது முதல் 23 வயது வரை இருக்கும் என்று சோதனை முடிவு தெரிவிக்கிறது.
குற்றம் சுமத்தப்பட்ட சிறாரின் தந்தை தன் மகனுக்கு சாதகமாக வழக்கு மாற வேண்டுமென போலி பிறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், குற்றம் சுமத்தப்பட்ட சிறுவனின் சகோதர சகோதரிகளின் பிறந்த தேதிகளுடன் ஒப்பிடுகையில் இது மாறுபடுகிறது.
இதையடுத்து விசாரணைக் குழு, சிறார் என்று சொல்லிக் கொள்ளும் குற்றவாளியின் வயதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. எனவே, இதுவரை கத்துவா சிறார் நீதிமன்றத்தில் நடந்து வரும் அந்தக் குற்றவாளியின் வழக்கின் போக்கு முற்றிலும் மாறியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com