சிங்கமும் சிறுத்தையும் ஒரே பிரேமில்: உற்சாகமாய் பகிரும் கார்த்தி
By Isaivaani
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி விவசாயி கதாபாத்திரத்தில் நடித்து நடித்துள்ளார். கதாநாயகியாக சாயிஷா நடித்துள்ளார். சத்யராஜ், ஸ்ரீமன், சூரி, பானுபிரியா, பிரியா பவானி, சௌந்தரராஜா, போன்ற பலரும் படத்தில் இணைந்துள்ளனர்.
சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். விவசாயம், மற்றும் விவசாயிகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் முடிந்து இறுதிக்கட்ட வேளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தி வரும் விருது வழங்கும் விழாவில் கடைக்குட்டி சிங்கத்தின் டீஸர் ஞாயிறு அன்று வெளியிடப்பட்டது.
டீசரை வெளியிட்ட பின் பேசிய கார்த்தி, படத்தில் அண்ணன் சூர்யா கௌரவ வேடத்தில் நடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜின் பசங்க 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தினார் சூர்யா. தற்போது கடைக்குட்டி சிங்கம் படத்திலும் கௌரவ தோற்றத்தில் நடித்து இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com