ஸ்டார்பக்ஸ் சேர்மன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியா?
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட புகழ்பெற்ற உணவக நிறுவனம் ஸ்டார்பக்ஸ். இதன் செயல்தலைவராக இருப்பவர் ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ்.
இந்த மாத இறுதியில் ஸ்கல்ட்ஸ், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை விட்டு வெளியேற இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 36 ஆண்டுகள் அவர் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தாம் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து யோசித்து வருவதாக ஸ்கல்ட்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
பெருநிறுவனங்களில் தலைவர்களுள் வெளிப்படையாக அரசியல் கருத்துகளை தெரிவிக்கக்கூடியவர் 64 வயதான ஸ்கட்ல்ஸ். சமீப நாட்களில் தாம் நாட்டை குறித்து அதிகமாக யோசித்து வருவதாகவும், நாட்டில் பெருகிவரும் பிரிவினைகள் மற்றும் உலக அளவில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து தாம் சிந்தித்து வருவதாகவும் ஹோவர்ட் ஸ்கல்ட்ஸ் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அவர் நிறுத்தப்படலாம் என்று முன்பு வதந்திகள் பரவி வந்தன. ஒரு பாலின திருமணம், குடிபுகல் மற்றும் அதிபர் ட்ரம்ப் பயணியர் மீது விதித்த தடை போன்ற சமுதாய பிரச்னைகள் குறித்து ஸ்கட்ல்ஸ் அடிக்கடி கருத்து தெரிவித்து வருகிறார்.
11 கடைகளோடு ஆரம்பித்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம், தற்போது 77 நாடுகளில் 28,000 கடைகளாக பெருகியுள்ளது. ஸ்டார்பக்ஸில் பணியாளர் நல நடவடிக்கைகள் பலவற்றையும் இவர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com