காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து நக்மா அதிரடி நீக்கம்

ரஜினிகாந்த் முதல் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை நக்மா. இவர், நடிப்புக்கு முழுக்கு போட்ட பிறகு அரசியலில் குதித்தார்.

கடந்த 2015ம்ஆண்டு, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டவர் நக்மா.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக பாத்திமா ரோஸ்னா என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக தொடர்ந்து செயல்படுவார் என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

ஆனால், நக்மாவை பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் தலைமை தெரிவிக்கவில்லை என்ற தகவலும் கசிந்து வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>