வகுப்பறையில் களியாட்டம் - அமெரிக்காவில் ஆசிரியருக்கு கல்தா
அமெரிக்காவில் ஃப்ளோரிடாவில் வகுப்பறையில் பெண் ஆசிரியை ஒருவருடன் தகாதவிதமாக நடந்துகொண்டதற்காக ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஃப்ளோரிடாவில் ஃபோர்ட் மையர்ஸில் உள்ள ஹைட்ஸ் ஆரம்ப பள்ளியில் பணிபுரிந்து வந்தவர்கள் ஜஸ்டின் பிண்டோ மற்றும் சமந்தா வில்ஹைடு. இவர்கள் இருவரது நடத்தையில் சந்தேகம் இருப்பதாக மே மாதம் 2-ம் தேதி உடன் ஆசிரியர் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதற்கு இருநாட்கள் கழித்து, பள்ளியின் முதல்வர் டோக் பாலோவ் பள்ளியின் கேமிரா மூலம் கண்காணித்துள்ளார்.
சந்தேகத்துக்கு உரிய ஆசிரியர்கள் இருவரும் ஒரே வகுப்பறைக்குள் செல்வதை பார்த்த முதல்வர், நேரடியாக அங்கு சென்றார். அங்கு இருவரையும் தகாத நிலையில் பார்க்க நேரிட்டதால், இருவரையும் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்துள்ளார். வகுப்புகள் ஆரம்பிக்கும் முன்னதாக இருவரும் பலமுறை ஆசிரியர் பிண்டோவின் அறையில் சந்தித்துள்ளதாக வீடியோ பதிவுகள் காட்டுகின்றன.
ஜஸ்டின் பிண்டோ, தகுதிகாண் பருவத்தில் தற்காலிக பணி காலத்தில் இருந்ததால் அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமந்தா வில்ஹைடு நான்கு ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். ஆகவே, அவர் கல்வி மாவட்டத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com