கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல: காலா குறித்து ரஜினி பேட்டி

காலா திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. காரணம் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகளை தங்களது கண்டனங்களை தெரிவித்தும், காலா திரைப்படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் போர்க்கொடி பிடித்து வருகின்றனர்.  கன்னட அமைப்புகளுக்கு ஆதரவாக கர்நாடக வர்த்தக சபையும் காலா படத்திற்கு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக, வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், படத்தை வெளியிட வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவு அளிக்க முடியாது என்றும், படம் வெளியானால் மாநில அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த்," காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் - விவசாயிகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தனது வாயால் கூறினால் திரைப்படத்தை வெளியிட அனுமதிப்போம்" என்று நிபந்தனையை கூறினார். அதற்கு ரஜினிகாந்த், "காலா திரைப்படம் வீம்புக்காக கர்நாடகாவில் மட்டும் வெளியிடவில்லை. உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தை தடங்கல் இன்றி வெளியிடுவது தான் வர்த்தக சபையின் வேலை ஆனால் காலா விஷயத்தில் கர்நாடக வர்த்தக சபையே சிக்கல் கொடுப்பது ஆச்சர்யமாக உள்ளது.  காவிரி விவகாரத்தில் என்ன தீர்ப்பு கொடுக்க பட்டதோ அதை தான் நானும் செயல் படுத்த கூறினேன். அதையும் மீறி காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. மேலும் இது தொடர்பாக  கன்னட அமைப்புகள், என்னை சந்தித்து பேசி இருக்கலாம். கர்நாடக உயர்நீதிமன்றம் சொன்னது போல் காலா திரைப்படம் வெளியாகும் திரையரங்கத்திற்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு வழங்குவார் என எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார்.  மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.co
More News >>