மின்மயம் ஆகும் தெலுங்கானா!- சுற்றுச்சூழல் மேம்பாடுக்காக புது யோசனை

தெலுங்கானாவில் அரசுப் பேருந்து உட்பட உள்ள வாகனங்களை மின் மயமாக்கும் முயற்சியை ஹைதராபாத் மாநகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஐதராபாத்தில் 4,000 அரசுப் போக்குவரத்து வாகனங்கள் ஓடுகின்றன. இவை அனைத்தும் டீசலில் இயங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிக காற்று மாசு உண்டாகிறது. இந்நிலையில், இதை அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற முடிவு செய்துள்ளது தெலுங்கானா அரசு.

முதற்கட்டமாக, 500 டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களைப் பொதுப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது அம்மாநில அரசு. இந்த வாகனங்களை அறிமுகப்படுத்தும் விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அந்த விழாவில் முனிசிபாலிட்டி நிர்வாக அமைச்சர் கே.டி.ராம ராவ் கலந்து கொண்டு, கொடியசைத்து வாகனங்களை பொதுப் பயன்பாட்டுக்கு துவக்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ”தெலுங்கானா தான் இந்தியாவிலேயே அதிகமாக சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் மாநிலம் ஆகும். இங்கு 3,300 மெகா வாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுப் போக்குவரத்தை மின்சார மயமாக மாற்றுவதில் ஒரு முன் உதாரணமாக தெலுங்கானா இருக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>