ஜூனியர் விஜய்யிடம் கற்றுக்கொள்ளுங்கள் ரஜினி- இயக்குநர் அமீர்nbsp
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவது எப்படி என்று ஜூனியர் விஜய்யிடம் ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை கடந்த மாதம் 30ஆம் தேதி ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்காக தூத்துக்குடி சென்ற அவர், விமானநிலையத்தில் இருந்து மருத்துவமனை வரை திறந்த காரில் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி ஆரவாரமாக சென்றார்.
இதற்கு பல அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்தனர். ஆனால், இன்று தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய், ஆடம்பரமின்றி அமைதியான முறையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, நிதியும் வழங்கினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் அமீர், ஜூனியர் விஜய்யிடம் ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com