அடடே.. ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி
ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்ப்போம்..
தேவையானவை:
வாழைக்காய் - 3உப்பு - கொஞ்சம்காய்ந்த மிளகாய் - 3 (பொடி செய்தது )தேங்காய் எண்ணெய் - வதக்ககறிவேப்பிலை - கொஞ்சம் கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு - தாளிக்கஒரு பச்சை மிளகாய் - தாளிக்க
மசாலா பாக்கெட் (10 ரூபாய்க்கு பட்டை, சோம்பு,ரோஜா தூள், மராட்டி மொக்கு என கிடைக்கிறதே அது.....)+ கொஞ்சம் தேங்காய்+2 பல் பூண்டு+கொஞ்சம் வெங்காயம் :- கொஞ்சம் நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
செய்முறை:
வாழைக்காயை சிறு சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெயை ஒரு வாணலியில் காய வைத்து,கறிவேப்பிலை, கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு, பச்சை மிளகாய் - போட்டுத் தாளிக்கவும்.
பிறகு கொஞ்சம் கூட எண்ணெய் ஊற்றி வாழக்காய் துண்டங்களை போட்டு நன்கு வதக்கி,மசாலா அரைத்ததையும் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். ருசியான வாழைக்காய் மசாலா கறி ரெடி..
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com