காலாவுக்கு கர்நாடகாவில் தொடரும் சோதனை! #Kaala

கன்னட அமைப்பினரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் காலா படம் வெளியாகவில்லை.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் உலக முழுவதும் இன்று வெளியாகி உள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. திரையரங்குகள் முன்பு ஆர்வமுடன் குவிந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காலா வெளியிட உதவ வேண்டும் எனவும் கர்நாடகா அரசுக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனிடையே, கர்நாடகா மாநில திரையரங்குகள் முன்பு திரண்ட கன்னட அமைப்பினர், ரஜினி ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றிதால், பதற்றம் ஏற்பட்டது.

அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க, திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>