காலா ரிலீஸ்... பிரபல ஐடி நிறுவனம் விடுமுறை அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள காலா படத்தை காண கேரளாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு வெளியாகும் முதல் படம் என்பதால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படம் ரிலீஸ் முன்னிட்டு கேரளாவில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டெலிசியஸ் டெக்னாலஜி தங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐடி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ரஜினியை கவுரவப்படுத்தும் நோக்கத்தில் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் காலா படம் ரிலீசையட்டி நாளை (இன்று) விடுமுறை அறிவிக்கப்படுகிறது ” என்றிருந்தது.கபாலி படம் ரிலீஸின்போதும் கூட பல ஐடி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>