இலவசம்.. இலவசம்.. பெட்ரோல் போட்டுக்கிட்டா செய்தித்தாள் இலவசம்.. சீர்காழியில் பரவும் புதிய வியூகம்
By Isaivaani
இலவசம் வழங்குவது என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு அங்கமாகி விட்டது. நுகர்வோர்களை எதாவது ஒரு பொருளை வாங்க தூண்டுவதற்காக, அதற்கு சலுகையாக வேறு ஒரு பொருள் வழங்குவது வழக்கம் தான்....
இது போன்ற சலுகைகளை மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், உணவு பண்டங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பலவற்றிற்கு இலவசமாக வழங்குவது பொருத்தமாக இருக்கும்.
இதற்கெல்லாம் தற்போது விதிவிலக்காக, சீர்காழியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவத்தின் பெட்ரோல் வங்கியில் பெட்ரோல் வாங்கினால் செய்தித்தாள் இலவசம் என போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது
இந்த போஸ்டரில் 200 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் டீசல் வாங்கினால், தினமணி செய்தித்தாள் இலவசம் என்றும், அதுவும் முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் தான் இந்த செய்தித்தாள் கிடைக்கும் எனவும் குறிக்கப்பட்டு உள்ளது,
மேலும் தினமும் காலை 6 மணி முதல் இந்த சலுகையை வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது,
இந்த விளம்பரம் தற்போது அங்குள்ள மக்களிடேயே கொஞ்சம் ரீச் ஆக தொடங்கியுள்ளது,
மேலும் இந்த வாசகம், மக்களிடேயே செய்தித்தாளை படிக்கும் ஆர்வத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது என்று அங்குள்ள பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வியாபார தந்திரமாக, இதுபோன்ற புது வகையான இலவச மந்திரங்களை விற்பனையாளர்கள் அறிமுகப்படுத்தும்போது, அதுவே அந்த பொருளுக்கு சிறப்பாக விளம்பரமாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை.