ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய இந்திய வீராங்கனை!

மணிப்பூரைச் சேர்ந்த இந்திய பளுதூக்கும் வீராங்கணை சஞ்சிதா சன்னு ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய விவகாரத்தில் கூடுதல் விசாரணையில் தன்னுடைய தலையிடுதலும் வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தனிடம் கோரிக்கை வைத்துள்ளார் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்.

கடந்த மே 15-ம் தேதி, 2018 காமன்வெல்த் போட்டிகளின் பளுதூக்குதல் பிரிவில் வெற்றி நாயகியாக வலம் வந்த சஞ்சிதா மீது ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில், அவர் மீது குற்றம் நிரூபணமாகி நான்கு ஆண்டுகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறுவதில் இருந்து விலக்கப்பட்டார். இதுகுறித்து சஞ்சிதா சேர்ந்த மணிப்பூர் மாநிலத்தின் முதல்வர் பிரேன் சிங் கூறுகையில், “ஊக்கமருந்து சோதனை முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம். சோதனைக் கூடத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “சஞ்சிதாவின் ஊக்க மருந்து சோதனை முடிவின் வரிசை எண்ணும் சோதனைக் கூடம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளில் உள்ள வரிசை எண்ணும் வெவ்வேறாக உள்ளது. இதனால் சஞ்சிதாவின் சோதனை முடிவு தவறுதலாக சோதனைக் கூடத்தில் மாறியிருக்கலாம்” என மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதி உள்ளார் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்.

மேலும், “இதனால் தயவு கூர்ந்து சஞ்சிதாவின் ஊக்கமருந்து சோதனை விவகார வழக்கு விசாரணையில் நானும் இணைந்து வழக்கு விசாரணையை வெளிப்படையாக்க விரும்புகிறேன். எங்களது மணிப்பூர் வீராங்கணைக்குத் தவறுதலாக நேர்மை தவறி நியாயம் இன்றி தீர்ப்பு வழங்குவதில் அதிகாரிகள் கடுமை காட்டியுள்ளனர்” என ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>