இளமையின் ரகசியம் என்ன...? பேரவையில் எழுந்த சிரிப்பலை!

சட்டப்பேரவைக்கு கலர்ஃபுல்லாக வந்துள்ள எதிர்க்கட்சி துணைத்தலைவர் இளமையின் ரகசியம் என்ன என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டதால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், 73 வது வட்டத்தை தனது தொகுதியில் ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அரசு 72 வட்டங்களை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், "அம்மா அரசு 72 வட்டங்களை ஏற்படுத்தியுள்ளது மேலும் வட்டங்களை ஏற்படுத்தினால் சட்டப்பேரவையில் தொடர்ந்து புகழ்வேன்" என்றார்.

அப்போது பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், "அம்மா அரசு என கூறியதற்கு நன்றி, பேரவைக்கு கலர்ஃபுல்லாக வந்துள்ள துரைமுருகன் என்றும் 16 ஆக திகழும் இளமையின் ரகசியம் என்ன...?" எனக் கேட்டார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>