ஒன்பதாவது முறையாக சரிந்த பெட்ரோல், டீசல் விலை!

இன்று வியாழக்கிழமை பெட்ரோல், டீசல் விலை வெகுவாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அன்றைய நாளின் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இன்று அமலான விலைப்பட்டியல் அடிப்படையில் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 77.63 ரூபாய் ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80.28 ரூபாய் ஆகவும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 85.45 ரூபாய் ஆகவும், சென்னையில் 80.59 ரூபாய்க்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்ப்டையிலேயே இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

சர்வதேச மாற்றங்களால் தொடர் ஏற்ற இறக்கத்தில் செல்லும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதில் முனைப்பு செலுத்தி வருகிறார் எண்ணெய் வள அமைச்சர் தர்மேந்திர பிரதான். சமானிய மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை சுமையாக உருமாறிவிடக் கூடாது என மத்திய அமைச்சர் பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>