ஏடிஎம் கொள்ளை வழக்கு... அரசியல் கட்சியினருக்கு தொடர்பா?

ஏடிஎம் கொள்ளையனை கைது செய்யக் கோரி புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படுவதாக காவல்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு போலி வங்கி அட்டை தயாரித்து பொதுமக்களின் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறை கைது செய்தது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சார்ந்த அதிமுக பிரமுகர் ரகுநாதன் என்பவரின் மகன் சந்துருஜி என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அவரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சந்துருஜியை கைது செய்யக் கோரி, கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுச்சேரி மாநில சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். தடுப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்கள்-போலீசுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>