உயரிய ஆப்பிள் விருது வென்ற தமிழர்! தொழில்நுட்பத்துக்கான அடையாளம்
சென்னையைப் பூர்விகமாகக் கொண்டவருக்கு, சிறந்த செயலியை வடிவமைத்ததற்காக ஆப்பிள் நிறுவனம் விருது கொடுத்து கவுரவித்துள்ளது.
சென்னையைப் பூர்விமாகக் கொண்டவர் ராஜா விஜயராமன். இவர் `கால்சி 3' (calzy 3) என்ற செயலியை சில ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைத்தார். இந்த செயலியின் மூலம் மிகவும் அதி நவீன வசதி கொண்ட கால்குலேஷன் செய்ய முடியும்.
iOS தொழில்நுட்பங்களை வைத்து மல்டி- டாஸ்கிங், ஃபேஸ் ஐடி, டச் ஐடி போன்ற வசதிகை இந்த செயலி தர வல்லது. இந்த செயலி 150 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மேன்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு ஆப்பிள் நிறுவனம், 2018 ஆம் ஆண்டுக்கான WWDC விழாவில் சிறந்த செயலி வடிவமைப்புக்கான விருதை வழங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ள இந்த விருது குறித்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ராஜா, `எனது செயலியை 150 நாடுகளுக்கும் மேல் இருப்பவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது, ஆப்பிள் நிறுவனமும் எனக்கு சிறந்த செயலி வடிவமைப்பாளருக்கான விருதை வழங்கியுள்ளது.
இவை என்னை மிகவும் பெருமை கொள்ளச் செய்துள்ளது. மிகவும் உற்சாகமூட்டும் உதவிகரமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.