அமெரிக்கா - நைட் கிளப்பில் தவறி விழுந்த துப்பாக்கி.. அசம்பாவிதம்

அமெரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்தார். கடந்த சனிக்கிழமை அதிகாலை டென்வர் நகரில் இச்சம்பவம் நடந்தது.

கொலரடோவின் டென்வர் நகரில் மைல் ஹை ஸ்பிரிட்ஸ் டிஸ்டில்லரி டேஸ்டிங் பார் உள்ளது. இங்கு அதிகாலை 12:45 திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

அங்கு நடனம் ஆடிக்கொண்டிருந்த தாமஸ் ரெடிங்க்டன் (வயது 24) என்ற வாலிபரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.

அமெரிக்க உளவுத்துறையை (எஃப்பிஐ) சேர்ந்த ஒருவர், பணிநேரம் முடிந்து விடுதியில் நடனம் ஆடியுள்ளார். அப்போது உறையிலிருந்து தவறி விழுந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது தெரிய வந்தது.

“யாரோ பட்டாசு வெடிக்கிறார்கள் என்று நான் நினைத்தேன். என் காலிலிருந்து இரத்தம் வழிந்ததை பார்த்தபிறகே வெடித்தது துப்பாக்கி என்று தெரிந்து கொண்டேன்," என்று காயம்பட்ட தாமஸ் ரெடிங்க்டன் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து டென்வர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>