இந்திய கிரிக்கெட் அணியில் களமிறங்கிய ஜூனியர் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதனால், சச்சினின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். உலகெங்கும், சச்சினுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான சச்சின், சர்வதேச ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
“புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?”.. சச்சினை தொடர்ந்து, சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியில் களமிறங்கி உள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட அர்ஜூன் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்தார். இந்நிலையில், சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இவரது முதல் போட்டி, இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் அர்ஜூன் விளையாடுகிறார். உலக சாதனை படைத்த சச்சினை தொடர்ந்து, மகன் அர்ஜூனும் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைகளை படைப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com