அம்மா முழு உடல் பரிசோதனை மையம் திறப்பு!

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில், அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், அம்மா முழு உடல் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து, முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் நவீன கருவியில் இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்தனர். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அம்மா கோல்டு திட்டத்திற்கு 1000 ரூபாய் கட்டணம், 60 வகையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்"

"அம்மா டைமண்ட் திட்டத்திற்கு 2000 ரூபாய் கட்டணம், 65 வகையான உடல் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்"

"அம்மா ப்ளாட்டினம் திட்டத்திற்கு 3000 ரூபாய் கட்டணம், 70 வகையான உடல் பரிசோதனைகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>