தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லா ரயில் சேவை
தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லா அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இன்று மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையம் தொடர்ந்து தாம்பரம் ரயில் நிலையத்தை ரூ.40.4 கோடி செலவில் மூன்றாவது முனையமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து. தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இருமார்க்கத்திலும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்பை திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தாம்பரம் - நெல்லை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) மணியளவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தாம்பரம் ரயில் முனையம் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் தாம்பரம் - நெல்லை இடையே அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை, மத்திய ரயில்வே இணைய அமைச்சர் ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கின்றனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையில் அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது. ஆனால், நாளை முதல் தாம்பரத்தில் இருந்து தினசரி நள்ளிரவு 12.30 மணிக்கு ரயில் இயக்கப்படும் என்றும் அது அன்றைய தினம் மதியம் 3.30 மணிக்கு சென்றடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மறுமார்க்கத்தில் இருந்து நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். 16 பெட்டிகள் கொண்ட ரயில் அனைத்தும் அமரும் இருக்கை வசதி கொண்டுள்ளதால் முன்பதிவு இல்லாமல் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தாம்பரத்தில் இருந்து நாளை முதல் தினசரி நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்படும் நேரம் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்றும் இன்று மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு வந்து சேரும் நேரம் மக்களுக்கு மிகுந்த வசதியை ஏற்படுத்தும் நேரம் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com