சீன நிறுவனங்களுக்கு தரவுகள் பரிமாற்றமா? ஃபேஸ்புக் மீது அமெரிக்கா பாய்ச்சல்

நான்கு சீன நிறுவனங்களோடு செய்து கொண்ட தரவுகள் பரிமாற்றம் குறித்து ஃபேஸ்புக் இன்னும் வெளிப்படையாக பேச வேண்டும் என்று அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 200 கோடி பேருக்கும் மேலானோர் ஃபேஸ்புக் சமூக ஊடகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது தனிப்பட்ட தகவல்களும் பொறுப்பாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது குறித்த அமெரிக்க நாடாளுமன்றத்தின் அக்கறையை இந்த செயல்பாடு காட்டியுள்ளது. "சீன தொழில்நுட்ப நிறுவனங்களுடனான தங்கள் உறவு குறித்து ஃபேஸ்புக் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கும், அமெரிக்க மக்களுக்கும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்," என்று குடியரசு கட்சியின் கிரேக் வால்டன், ஜனநாயக கட்சியின் ஃப்ரங் பெல்லானே ஆகியோர் ஓர் அறிக்கையின் வாயிலாக கேட்டுள்ளனர். முன்னதாக ஃபேஸ்புக், தங்கள் செயல்பாட்டை விரிவாக்கும் வண்ணம் ஃபோவாய் (Huawei) லெனோவா, ஓப்போ, டிசிஎல் உள்ளிட்ட அறுபது நிறுவனங்களோடு சில பயனர் தகவல்கள் பரிமாற்றத்திற்கு உடன்பாடு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது.    ஃபோவாய் (Huawei) நிறுவனம், எல்லா ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களைப் போல தாங்களும் ஃபேஸ்புக் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றுவதாகவும், சேமிக்கப்பட்ட எந்த பயனர் தகவல்களையும் தாங்கள் பயன்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளது. இது தவிர அமேசான், ஆப்பிள், ஹெச்டிசி, மைக்ரோசாஃப்ட், சாம்சங் போன்ற நிறுவனங்களும் தங்கள் தரவுகளை பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இரு குழுக்கள் முன்பு முன்னிலையான ஃபேஸ்புக்கின் ஸக்கர்பெர்க், அதற்குப் பிறகு ஒரு கேள்விக்கும் பதிலளிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
More News >>