பிரபல நிறுவனத்தின் நகை கடை உள்ளிட்ட 23 இடங்களில் வருமான வரி சோதனை!
சென்னை, பல்லாவரம் உள்பட 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
காந்தி பிரதர்ஸ் என்ற குழுமத்திற்கு சொந்தமான ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள், நிதி நிறுவனங்கள் என மொத்தம் 23 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
அந்த குழுமத்திற்கு தொடர்புடைய மருத்துவர் பிரகாஷ் சந்த், மற்றும் சந்தோஷ், சாந்திலால் ஜெயின், பிரகாஷ் ஆகிய மூன்று பேரின் நகைக்கடைகளிலும் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டி வருவாயை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் சோதனையில், ஆவணங்கள், நகை, பணம் சிக்கியுள்ளதா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனையின் இறுதியில் ஆவணங்கள் குறித்து தகவலை வருமான வரித்துறை தெரிவிக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com