சென்னை அமைந்தகரையில் பரிதாபம்: சுவர் இடிந்து 2 குழந்தைகள் பலி
சென்னை அமைந்தகரையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது வீட்டின் சுற்று சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பபகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கக்கன் நகரை சேர்ந்த அன்சார் தனது தந்தை மற்றும் சகோதரர் பரோசுடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார். அன்சாருக்கு தயான் என்ற மகனும், பரோஸ்க்கு முஸ்கன் என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில்,நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த இரண்டு குழந்தைகளும் தனது தாத்தா பாஷாவுடன் வீட்டின் முன்பக்கத்தில் உள்ள இடத்தில் விளையாடி கொண்டு இருந்தனர்.
ஏற்கனவே மழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் ஈரமாக இருந்துள்ளது. மேலும் காற்றும் சற்று பலமாக வீசியதால் தீடிரென சுவர் இடிந்து குழந்தைகள் மீது விழுந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஷா செய்வதறியாது கூச்சல்போட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்டனர். இதில், ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மற்றொரு குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சுவர் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com