கைது செய்யப்பட்ட உக்ரைன் மாடல் அழகி விடுதலை: உயர்நீதிமன்றம்
உக்ரைனை சேர்ந்த மாடலிங் அழகி தாரியா மோல்சா (22). உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி வந்த இவரை, தீடிரென அம்மாநில போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி கைது செய்தனர். விசாரணையில் வெறும் போலி ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள மோல்சா சட்ட விரோதமாக நேபாளம் வழியாக எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
மோல்சா ஏதும் உளவு பார்ப்பதற்காக இந்திய வந்தவரா போன்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இவரின் நண்பர்களிடமும் விசாரணை நடத்தினர். தீவிர விசாரணைக்கு பின் மோல்சா கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் சார்பில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்தருந்த மனுவை கோரக்பூர் நீதிமன்றம் தொடர்ந்து தள்ளுபடி செய்து வந்தது. இதனை அடுத்து உத்தரபிரதேச உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு ஒன்றை தாக்கல் செய்தார் மோல்சா. அதற்கு, கடந்த வாரம் உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் பின்னர், மோல்சாவை விடுதலை செய்வதற்கான நடைமுறைகளும் நடந்து வந்தன.
இந்நிலையில் மோல்சாவை விடுதலை செய்யலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது. தொடர்ந்து, இதற்கான ஆணையை கோரக்பூர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட சிறை அதிகாரிகள் மோல்சா இன்று விடுதலை செய்யப்படுவார் என்ற தகவலை வெளியிட்டனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com