மூணு வருஷத்துக்கு நான் ரொம்ப பிஸி: சிம்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர், அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும், தமிழர்களுக்கு என்று தனது குரல்களை பல்வேறு போராட்டங்களுக்கு கொடுப்பதால், ரசிகர்களை தன் பக்கம் தக்கவைத்து கொண்டிருக்கிறார்.
அடுத்த மூன்று வருடங்களுக்கு 4 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம் சிம்பு. தற்போது நடித்து வரும் மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம். அடுத்து, பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம், அதன் பின்பு சிம்புவே ஒரு திரில்லர் படத்தை எழுதி இயக்கவுள்ளார். படத்திற்கு இயக்குனர் கெளதம் மேனன் வசனம் எழுதுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதற்கு பிறகு, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், மூன்று ஹீரோக்கள் கொண்ட கதையில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இது அவருடைய 36வது திரைப்படம்.அதனை தொடர்ந்து இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிம்பு. அடுத்தடுத்து தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், நான் ரொம்ப பிஸி என அவர்களை தவிர்த்து வருகிறாராம் சிம்பு.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com