தெலுங்கு பதிப்பில் சாதனை புரிந்து வரும் இரும்புத்திரை
தமிழில் கடந்த மே 11ம் தேதி வெளியான திரைப்படம் இரும்புத்திரை. அர்ஜுன், விஷால், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் என பெரிய குழுவுடன் திரைப்படம் வெளிவந்தது. படம் எதிர்பார்த்ததை விட நல்ல விமர்சனங்களை பெற்றது.
பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதை, தற்போதுள்ள கம்ப்யூட்டர் காலத்தில், பொது மக்கள் அன்றாடம் பல புதிய விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று, சமூக வலைத்தளங்களை உபயோகிப்பது. மற்றொன்று கடன் அட்டைகள் மற்றும் வங்கி கணக்கு பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளை நாள் தோறும் சந்தித்து வருகின்றனர். இதுவே கதையின் கரு.
இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் இரும்புத்திரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளியான 7நாட்களில் அபிமன்யுடு ரூ.12 கோடி அளவிற்கு வசூல் மழை பொழிந்து வருகிறது.
தெலுங்கில் வெளியாகும் நேரடி திரைப்படங்களை விட இந்த இரும்புத்திரை (அபிமன்யுடு) நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com