கால்பந்து கோப்பை: அதிர்ச்சித் தோல்வி அடைந்த இந்திய அணி!

சர்வதேச தொடர்களுள் ஒன்றான கால்பந்து கோப்பையில் இந்திய அணியை 2-1 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தி வெற்றியைக் கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.

இந்தியா, கென்யா, தைபே உள்ளிட்ட பல உலக நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை 2018 தொடர் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. மும்பையில் தொடங்கிய முதல் போட்டியில் இந்தியாவும், சீன தைபே அணியும் மோதின. இந்தப் போட்டியில் தைபே அணி, ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், இந்திய அணி 5 கோல்கள் அடித்து கலக்கியது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி போட்ட மூன்று கோல்கள்தான். இதேபோல் அடுத்த போட்டியான கென்யா உடனான போட்டியிலும் கேப்டன் சுனில் சேத்ரி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டி சுனில் சேத்ரியின் 100- வது சர்வதேச போட்டி என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்நிலையில் மும்பையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியை- நியூசிலாந்து அணி எதிர்கொண்டது. முதல் பாதியில் தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டி வந்த நியூசிலாந்து அணி, தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தைத் தொடர்ந்தது.

மொத்தம் ஏழு முறை அணியின் இருப்பை மாற்றி அமைத்தும் கேப்டன் சுனில் சேத்ரியின் ஆக்ரோஷமான கோல் அடிக்கப்பட்டும் நியூசிலாந்து அணியிடம் இத்தொடரில் இதுவரையில் தோல்வி அடையாத இந்திய அணி தோல்வியைப் பதிவு செய்தது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

 

More News >>