நிலச்சரிவில் சிக்கி 6 பேர் பலி: சிம்லா அருகே பரிதாபம்
சிம்லா: குலு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கார் கவிழ்ந்து, அதில் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள குலு மாவட்டத்துக்கு உட்பட்ட ராம்பூர் வழியாக நார்மன்ட் சாலை மலைப்பாதையில் நேற்றிரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராமல் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குலு மாவட்ட வட்டாட்சியர் தலைமையிலான மீட்புக் குழு விபத்துக்குள்ளான காரில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 6 பேரினது உடலை கண்டெடுத்தனர். இந்த கோர விபத்து பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், இதனால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.