களம் இறங்கினார் ஜூனியர் டெண்டுல்கர்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி அடுத்த ஸ்ரீலங்காவில் நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க உள்ளது.
ஜுலை மாத தொடரில் இந்திய அணி ஒரு நாள் மற்றும் 4 நாள் கொண்ட போட்டித் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இப்போட்டியில் தான் ஆல் ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கர் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்காக ஜோனல் அகாடெமியில் பயிற்சி பெற்ற முக்கிய இந்திய வீரர்களுள் ஒருவராக அர்ஜுன் டெண்டுல்கர் இருந்துள்ளார். உனாவில் நடந்த போட்டிகளிலும் அர்ஜுன் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கை செல்லும் இந்திய அணிக்கு டெல்லி வீரரான விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் தலைமை தாங்குகிறார். கடந்த 2017-18 ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் முதன் முறையாக அறிமுகமானார் அனுஜ். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியிலும் அனுஜ் விளையாடியுள்ளார்.
அடுத்ததாக ஒரு நாளுக்கான அணியை ஆர்யன் ஜுயால் தலைமை தாங்குகிறார். விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேச வீரராக அறிமுகமாகியவர் ஆர்யன்.
சமீபத்தில், கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த சிட்னி மைதான டி20 கோப்பைக்கான போட்டியில் களம் இறங்கி ஆல் ரவுண்டராகக் கலக்கி உள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர். 18 வயதான அர்ஜுன் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய ஊடகங்களால் வெகுவாகப் பாரட்டப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com