1 ரூபாய் கொடுத்து டாடா எஸ்.யூ.வி-களை ஓட்டிச் செல்லுங்கள்!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. இதையொட்டி குறிப்பிட்ட காலத்துக்கும் மட்டும் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை அளிக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு லட்சம் ரூபாய் வரையிலான சலுகையும், ஒரு ரூபாய் கொடுத்து கடன் பெற்றுக்கொள்ளும் வசதியும் சிரப்பு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் டாடா அறிவித்துள்ளது. இச்சலுகைகள் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அத்தனை வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிறப்பு கார்களான டியாகோ, செடான், நெக்சான் போன்ற வகைகள் அதிக வரவேற்பைப் பெற்ற கார்களாக உள்ளன. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை சதவிகிதம் 61 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சலுகைகள் வருகிற ஜூன் மாதம் 25-ம் தேதி வரையில் மட்டுமே வழங்கப்பட உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com