குடியரசுத் தலைவர் மாளிகையில் நாறிய பிணம்!

குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் ஒரு நபர் மரணம் அடைந்துள்ளார்.

ஆனால், ஐந்து நாள்களுக்குப் பின்னர் நாற்றம் எடுத்ததும் தான் பணியாளர்களின் குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் இருந்து நாற்றம் வருவது கண்டறியப்பட்டு பிணம் இருப்பது அறியப்பட்டு உள்ளது.

கதவு உள்பக்கம் தாழிட்டிருந்த நிலையில் போலீஸார் உடலைக் கைப்பற்றிய போது அப்பிணம் நான்கு அல்லது ஐந்து நாள்களுக்கு முன்னரே மரணம் அடைந்திருக்க வேண்டும் என போலீஸார் தரப்பில் கூறியுள்ளனர்.

மரணம் அடைந்தவர் திரிலோக் சந்த் என்றும் அவர் ஜனாதிபதியில் செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் என்றும் அறியப்பட்டுள்ளது. திரிலோக் மாரடைப்பால் மரணம் அடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுவரையில் காரணம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>