விழுந்தது அதிர்ஷ்டம்! லட்சங்களைத் திருப்பி அனுப்பிய அமெரிக்கர்!
அமெரிக்கர் ஒருவர் தனக்குத் தவறுதலாகக் கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கான செக்கை அதே வங்கிக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் எரிக் கேப்ரியல். கடந்த மாதம் தன் வீட்டுக்கு வந்த கடிதங்களை எல்லாம் வரிசையாகப் பிரித்து பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அமெரிக்க வங்கியின் செக் உள்ள ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான தொகை பதியப்பட்டு இருந்துள்ளது.
முதலில் அந்தத் தொகையை தனக்கே தனக்கு வைத்துக்கொள்ளலாம் என்று தான் நினைத்துள்ளார் எரிக். ஆனால், அது தவறு என்றும் நம்முடையது இல்லை இப்பணம் என்று உணர்ந்து பணம் வந்திருந்த வங்கிக்கே பணத்தைத் திருப்பி அனூப்பியுள்ளார் எரிக்.
இத்தவறுக்கு அமெரிக்க வங்கி நிர்வாகம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் ஒரு பெரிய தொகையை திருப்பி அனுப்பிய எரிக்குக்கு வாழ்த்துகளையும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com