கர்நாடக அரசியலில் சலசலப்பு... முதல்வர் குமாரசாமி அதிர்ச்சி!
அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதால் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது கர்நாடக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசின் அமைச்சரவை பட்டியலில், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் இடம்பெறவில்லை. இதனை கண்டித்து பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல், ஹொஷ்கோட்டே தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.டி.பி.நாகராஜ் அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காத்தை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகராஜ் அவருக்கு அமைச்சர் பதவி வழங்காவிட்டால், ஹொஷ்கோட்டே தொகுதிக்கு உட்பட்ட 16 தாலுக்கா மற்றும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாட்டில், ஹரீஸ், டாக்டர் சுதாகர் உள்ளிட்டோர் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர்.
உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவர்களை காங்கிரஸ் புறக்கணித்தால் அவர்கள் ஓரணியாக திரண்டு பாரதிய ஜனதாவுக்கு தாவக்கூடும் என தகவல் பரவி வருகிறது. இதனால் முதலமைச்சர் குமாரசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com