மருத்துவர்கள் அலட்சியம்... நோயாளிகள் உயிரை காவு வாங்கிய ஏ.சி!
கான்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஏசி பழுதானதால் 4 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் கணேஷ் சங்கர் வித்யார்த்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது.
இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவில் 4 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். திடீரென ஏசி பழுதானதால் அவர்கள் 4 பேர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆனால், உறவினர்கள் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. 4 பேருள் 2 பேர் மாரடைப்பாலும், 2 பேர் நாள்பட்ட நோயின் தீவிரத்தாலும் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவமனையின் முதல்வர் நவ்னீத் குமார் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com