சமூக வலைத்தளங்களின் அமிதாபை எட்டு கோடி பேர் பின்தொடர்கிறார்கள்
By Nabil
நடிகர் அமிதாப் பச்சன் கடந்த 2010-ம் ஆண்டு சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தார். 2012-ம் ஆண்டு பேஸ்புக் பக்கத்திலும் இணைந்தார்.
அவரை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை இன்று 31.7 மில்லியனாக (மூன்று கோடியே பத்து லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பேஸ்புக்கில் அவரை 2 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 770 பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
புகைப்படங்களை பதிவிடும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர். .
அனைத்து வகையான சமூக வலைத்தளங்களிலும் தன்னை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 8 கோடியாக உயர்ந்ததுள்ளதாக அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணமாக இருந்த தனது அபிமானிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்