செவ்வாயில் உயிரிகள் இருந்ததற்கான புதிய ஆதாரம் - நாசா தகவல்

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய ‘நாசா’ செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கியுள்ளது. அது ரோவர் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.

அந்த விண்கலம் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும் வருகிறது. உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரிகள் 5 மில்லிமீட்டர் நீளமுள்ள மண் - பாறைகள் மீது காணப்படுபவைகளாக இருக்கின்றன. இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் பழங்கால ஏரியின் படுகையில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதில், தியோப்பனிஸ், டூலீன், பென்சீன் உள்ளிட்ட சிறிய கார்பன் சங்கிலிகள் மற்றும் புரோபேன் மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாயில் கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாயில் 30 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து, நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரக இணை நிர்வாகி தாமஸ் சூர்புசென் கூறுகையில், “இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

அங்கு உயிர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை மேலும் உறுதியாக தேடிக் கண்டுபிடிக்க முடியும். அத்துடன், செய்வாய் கிரகத்தில் மேலும் பலவற்றை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

20 வருடங்களில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற முடியும் என்று ‘நாசா’ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>