நடிகர் சங்க தலைவர் நாசர் ராஜினாமா?
விஷால் தேர்தலில் போட்டியிட முற்பட்டதால் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் பல நிர்வாகிகளிடைய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென்று நேற்று நடிகர் சங்கத் துணைத்தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா செய்துள்ளார். கடிதத்தை இன்னும் நாசர் ஏற்கவில்லை என்றாலும், விஷால் செயல் பிடிக்காமல் தான் பொன்வண்ணன் ராஜினாமா செய்ததாக பேசப்படுகிறது. இது பற்றி நடிகரும், இயக்குனருமான எஸ்.வி. சேகர் கூறுகையில், "பொன்வண்ணன் இந்த முடிவை இப்போ எடுக்கவில்லை, கடந்த 5ம் தேதியே எடுத்துவிட்டார், இடையில் பல சமாதான பேச்சுக்கள் நடந்து எதுவும் ஒத்துவராமல் அறிவித்துவிட்டார்.
அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும் விஷாலின் செயல் பிடிக்காமல் தான் இந்த முடிவு என்பது என் கருத்து. இன்னும் கொஞ்ச நாள் பாருங்கள் நடிகர் சங்க தலைவர் நாசரும் ராஜினாமா செய்வார் என்று குறிப்பிட்டார்.