சென்னை என்கிற மெட்ராஸ் படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்!
ஒளிப்பதிவாளர் அரவிந்த் குமார் இயக்கத்தில் சுபலேகா சுதாகர், மூணார் ரமேஷ், மைம்கோபி, கௌரி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சென்னை என்கிற மெட்ராஸ்.
இப்படத்தின் டிரைலரைப் பார்த்த ரஜினிகாந்த், படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகளை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ரகசியமாக புலனாய்வு செய்யும் ஒரு பத்திரிக்கையாளர் தொடர்பான கதை. சமீபத்தில் இப்படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டார். அதனை பார்த்த ரஜினிகாந்த், படத்தின் கதை மற்றும் உருவாக்கப்பட்ட விதம் ஆகியவற்றைக் கண்டு மெய்சிலிர்த்துள்ளார்.கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். மதன் கார்க்கி இப்படத்தில் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இப்படத்திற்கு சுந்தர் மூர்த்தி, இன்பராஜ் சுபாஷ், காஷிஸ் வர்மா மற்றும் பர்மா ஆகிய 5 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.