குழந்தையை காரிலிருந்து வீசிய பெண்hellipஉலுக்கும் வீடியோ!
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாஃபர்நகரில், பட்டப் பகளில் பச்சிளம் குழந்தையை காரில் இருந்து தூக்கியெறிந்துள்ளார் ஒரு பெண்.
இந்த சம்பவம் சிசிடிவி கேமரா மூலம் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சி உத்தரப் பிரதேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவன சான்ட்ரோ கார் ஒன்று ஒரு குறுகலான தெருவில் செல்கிறது.
கார் ஒரு இடத்தில் நிற்கிறது. அவசர அவசரமாக உள்ளே இருக்கும் ஒரு பெண் துணியில் சுற்றிய ஒரு குழந்தையை வீட்டு வாசலில் எறிகிறார். பின்னர், உடனடியாக அந்த கார் அங்கிருந்து புறப்படுகிறது. இதை யாரும் பார்க்கவில்லை என்ற மிதப்பில் அந்த கார் வீடியோ ஃப்ரேமில் இருந்து மறைகிறது.
ஆனால், இந்த முழு சம்பவமும் ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தெருவில் வீசப்பட்டக் குழந்தையை போலீஸார் மீட்டு உள்ளூரில் இருக்கும் மருத்துவமனைகளில் சேர்த்துள்ளனர்.
குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை தரப்பு, `இப்போது தான் குழந்தை பிறந்துள்ளது. அதனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. சீக்கிரமே குழந்தையின் நிலை தேறிவிடும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் இதைப் போலவே ஒரு தம்பதியர் அவர்களுக்கு நாலாவதாக பிறந்த குழந்தையை தெருவில் வீசினர். ஆனால், அவர்களை போலீஸ் கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.