ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய அறிமுகம்!- ஹூண்டாய் ஐ20

ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை கார்களில் முக்கிய மைல்கல்லைப் பதித்த காராகக் கருதப்படுவது ஹூண்டாய் ஐ20.

மாருதி சுசூகி, பலேனோ, ஹோண்டா ஜாஸ், வோக்ஸ்வேகன் போலோ என அதிக வரவேற்பை ஒவ்வொரு கால கட்டத்திலும் பெற்ற கார்களின் வரிசயில் இந்த ஆண்டு 2018 இந்திய ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சியில் அதிகப்படியான வரவேற்பைப் பெற்ற காராக உள்ளது ஹூண்டாய் ஐ20.

மற்ற ஹூண்டாய் ஹேட்ச்பேக் வகை கார்களை விட ஹூண்டாய் ஐ20 மாறுபட்டதாக உள்ளது. காரணம், இதனதுதானியங்கி கியர் பாக்ஸ். வெர்னா ரக காரில் கிடைப்பது போலான 1.4 லிட்டர் மோட்டார் வகை தான் ஹூண்டாய் ஐ20-யிலும் அமைக்கப்பட்டு உள்ளது.

பலதரப்பு பெட்ரோல் என்ஜின் முறையைக் கைவிட முடிவெடுத்துள்ளது ஹூண்டாய். இதையடுத்து தானியங்கி தரத்தில் 1.2 லிட்டர் இன்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. முந்தைய ஹூண்டாய் வகைக் கார்களைப் போலவே டார்க் வெளியேற்றியை அமைக்காமல் சிவிடி முறையை ஹூண்டா ஐ20-யில் பயன்படுத்தியுள்ளது ஹூண்டாய் நிறுவனம்.

ஹூண்டாய் ஐ20 யின் சிறப்பு அம்சமே அதனது சிவிடி கியர் பாக்ஸ் தான். இதுதான் வண்டியின் சிறப்பான தரத்தை உறுதி செய்யும் அம்சமாக உள்ளது.

More News >>