வைப்பு நிதிகளின் வகைகள் தெரியுமா? முதலீடுகளுக்கான காலம்!
முதலீடுகளில் ரிஸ்க் எடுக்கத் தயங்குவோருக்கு ஏற்றதாக உள்ள சேமிப்புத் திட்டங்களில் உள்ள இரு முக்கிய திட்டங்களாக உள்ளது நிரந்திர வைப்பு நிதி மற்றும் தொடர் வைப்பு நிதி.
வங்கிகளில் வெறும் சேமிப்பு கணக்கு மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களை அதிகளவில் முதலீடு செய்ய வைத்து அதற்கு நல்ல வட்டியும் வழங்குவது நிரந்திர வைப்பு நிதி அகும். ஆனால், தொடர் வைப்பு நிதிக்கு தொடர்ந்து சிறிய அளவிலான தொகையைக் கூட இருப்பு வைக்க முடியும்.
வங்கிகளில் உள்ள சேமிப்புத் திட்டங்களிலேயே நிரந்திர வைப்பு நிதியும் தொடர் வைப்பு நிதியும் மட்டுமே பாதுகாப்பானதாகவும் பணம் திரும்பக் கிடைப்பதற்காக உறுதிப்பாடு உடனும் உள்ள சேமிப்புத் திட்டங்களாகும். ஆனால், இந்த இரண்டு வகை முதலீடுகளில் இருந்தும் மிகச் சரியானதைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
நிரந்திர கால வைப்பு நிதியில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான சேமிப்பத் தொகையை வாடிக்கையாளரே நிர்ணயம் செய்து கொள்ளலாம். வெவ்வேறு கால கட்டங்களுக்கான வசதிகள் இந்த நிரந்திர வைப்பு நிதி திட்டத்தில் உள்ளது. அதாவது 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிரந்திர வைப்பு நிதித் திட்டங்கள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன.