இன்று முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம்
மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் அனைத்து மருத்தவ கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது.
மருத்துவ கனவோடு நீட் தேர்வில் வெற்றிப்பெற்ற மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. இது அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், அரசு பல் மருத்துவ கல்லூரியிலும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 18ம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், மருத்துவ தேர்வுக்குழு, பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை&10 என்ற முகவரிக்கு வரும் 19ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
இதன் பிறகு, வரும் 28ம் தேதி தரவரிசை வெளியிடப்படும். இதைதொடர்ந்து, வரும் ஜூலை 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.