குடிபோதை டிரைவர்... அமெரிக்காவில் செய்தியாளர் பலி
போதையில் ஒருவர் ஓட்டி வந்த வாகனம் மோதி அமெரிக்காவில் செய்தியாளர் பலியானார்.
'யூஎஸ்ஏ டுடே' செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் ஓரன் டோரல் (வயது 53). வாஷிங்டன் நகரில் இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வடகிழக்கு நகர்ப்புறத்தில் இரவு 8:30 மணியளவில் இவரது இரு சக்கர வாகனத்தின் மீது சொகுசு கார் ஒன்று மோதியது. விபத்துக்குள்ளான செய்தியாளரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள், அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்துக்குக் காரணமான வாகனத்தை ஓட்டி வந்த டாரில் கிராண்ட் அலெக்ஸாண்டர் (வயது 47) போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இறந்துபோன ஓரன் டோலருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.