விஸ்வரூபம் - 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் சர்ச்சை, இடையூறுகளுக்கு இடையே 2013ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை பார்த்த தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தபடம், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு விஸ்வரூபம் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.
தமிழ் பதிப்பை கமலின் மகள் ஸ்ருதிஹாசனும், தெலுங்கு பதிப்பை ஜீனியர் என்டிஆரும், இந்தி பதிப்பை அமீர் கானும், வெளியிடுகின்றனர்.