ஜீவா நடிக்கும் ஜிப்ஸி படப்பிடிப்பு தொடக்கம்...
குக்கூ, ஜோக்கரை தொடர்ந்து ராஜூ முருகன் மூன்றாவதாக இயக்கும் ஜிப்ஸி படப்பிடிப்பு காரைக்காலில் தொடங்கியது.
ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் அம்பேத்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜீவா-நடாஷா சிங் நடிக்கும் ஜிப்ஸி படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கவிஞர் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். எஸ் கே செல்வகுமார் ஒளிப்பதிவை கவனிக்க, ரேமண்ட் டெரிக் கிராஸ்டா இதன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ‘நாச்சியார்' படத்தில் கலை இயக்குநராக பணியாற்றிய பாலசந்திரா இந்த படத்தில் இணைந்துள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் சமூகப் பிரச்சினை ஒன்றை எடுத்து சொல்ல உள்ளதாக ஜிப்ஸி குறித்து ராஜூ முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.