சாலைப்பணிகள்: திமுக - அதிமுக கார சார விவாதம்...

மத்திய அரசிடம் போராடி பெற்ற சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன் என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சோறு போடுமா என தி.மு.க உறுப்பினர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், மத்திய அரசிடம் போராடி பெற்ற திட்டத்தை எதிர்ப்பது ஏன் எனக் கேட்டார். திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்தால் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிபோகும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். 

பதிலளித்த முதலமைச்சர், "நிலம் கையப்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் உரிய  இழப்பீடு தொகை வழங்கப்படும். சேலம் முதலமைச்சர் மாவட்டம் என்பதால், பசுமை வழிச்சாலை திட்டத்தால், வேளாண்மை நிலம் பாதிக்கும் என சில கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர்" என்றார்.

"இந்த திட்டத்தால் தொழில் வளர்ச்சி மேம்படும். சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்" என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

More News >>