ரஜினியின் 2.0 அடுத்த ஆண்டு தான் வெளிவருமாம்
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூதுகவ்வும், ஜிகர்தண்டா, இறைவி போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அதற்கான படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் சில நாட்கள் முன்பு பூஜையுடன் துவங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த பெயரிடப்படாத சூப்பர் ஸ்டாரின் திரைப்படம் முடிக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே வேளையில் ரஜினிகாந்தின் எந்திரன் 2.0 என்ன ஆயிற்று என்ற கேள்விகள் உலா வருகிறது. கடந்த ஆண்டு படப்பிப்பு முடிந்த நிலையில் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் முடிக்கப்படாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது.
மீண்டும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியான நிலையில் மீண்டும் தற்போது எந்திரன் 2.0 ரிலீஸ் தேதி தள்ளிபோடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் காட்சிகள் இன்னும் முடிக்கப்படாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அதனால் 2.0 ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டு என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் சுமார் 450 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகி இருக்கும் எந்திரன் 2.0 படத்தில் எமி ஜாக்சன், அக்ஷய் குமார் இணைந்துள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா கடந்த 7ந் தேதி வெளியானது. அரசியல் பிரவேசம் செய்த பிறகு வெளியான முதல் திரைப்படம் காலா ரசிகர்களின் வரவேற்பில் வெற்றி பெற்றுள்ளது.